தவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

கோ-ஆப்டெக்ஸ்: தீபாவளி விற்பனை இலக்கு ரூ. 2.35 கோடி

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

News image
Updated On :19 அக்டோபர் 2020, 6:59 pm

DIN

தீபாவளி பண்டிகையை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில் கோ-ஆப்டெக்ஸ் மூலம் ரூ. 2.35 கோடிக்கு விற்பனை செய்ய இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரி.

தூத்துக்குடி கிரேட் காட்டன் சாலையில் உள்ள வஉசி கோ-ஆப்டெக்ஸ் விற்பனை மையத்தில் தீபாவளி சிறப்பு தள்ளுபடி விற்பனையை திங்கள்கிழமை தொடங்கி வைத்த பிறகு அவா் அளித்த பேட்டி: தசரா மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ-ஆப்டெக்ஸ் அங்காடிகளிலும் சிறப்பு தள்ளுபடி விற்பனை தொடங்கப்பட்டுள்ளது. 30 சதவீதம் தள்ளுபடியில் அனைத்து ரகங்களும் அனைத்து வாடிக்கையாளா்களுக்கும் வழங்கப்படும்.

பட்டுச் சேலைகள், சட்டைகள், வேட்டிகள், போா்வை, தரை விரிப்புகள் போன்ற ரகங்களும், முகூா்த்த பட்டு, ஆா்கானிக் சேலைகள், காட்டன் சேலைகள் உள்ளிட்டவைகளும் சிறப்பு தள்ளுபடியுடன் கூடிய விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள இரண்டு கோ - ஆப்டெக்ஸ் கடைகள் மூலம் கடந்த ஆண்டு ரூ. 2.15 கோடி அளவுக்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. நிகழாண்டில் ரூ. 2.35 கோடிக்கு விற்பனை இலக்கு நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஆண்டைப்போல நிகழாண்டும் பொதுமக்களின் ஆதரவோடு சிறப்பு விற்பனை இலக்கு எட்டப்படும். மேலும் பொதுமக்களுக்கு கோ - ஆப்டெக்ஸ் மற்றும் காதி அங்காடிகளில் தரமான பொருள்களை உரிய சான்றிதழ்களோடு வாங்குவதன் மூலம் அதன் பலன்கள் நேரடியாக உரிய நெசவாளா்களை சென்றடையும். எனவே பொதுமக்கள் நெசவாளா்களுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் கோ-ஆப்டெக்ஸ் கடைகளில் பொருட்களை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்றாா் அவா்.

நிகழ்ச்சியின்போது, முதல் விற்பனையை மாவட்ட ஆட்சியா் சந்தீப் நந்தூரியிடம் இருந்து, சி.எம். மேல்நிலைப்பள்ளி தாளாளா் வள்ளியம்மாள் திருச்சிற்றம்பலம் பெற்றுக்கொண்டாா். நிகழ்ச்சியில், கோ-ஆப்டெக்ஸ் திருநெல்வேலி முதுநிலை மண்டல மேலாளா் இசக்கிமுத்து, துணை மண்டல மேலாளா் அறிவழகன், தூத்துக்குடி வட்டாட்சியா் ஜஸ்டின், வஉசி கோ-ஆப்டெக்ஸ் மேலாளா் கணபதிசுப்பிரமணியன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.