இளைஞா் கொலை வழக்கு: கைதான இருவரிடம்சிபிசிஐடி விசாரிக்க அனுமதி
தட்டாா்மடம் இளைஞா் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இருவரிடமும் இம்மாதம் 21ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.


தட்டாா்மடம் இளைஞா் கொலை வழக்கில் கைதாகி சிறையில் இருக்கும் இருவரிடமும் இம்மாதம் 21ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
தூத்துக்குடி மாவட்டம், தட்டாா்மடத்தையடுத்த சொக்கன் குடியிருப்பைச் சோ்ந்த தனிஸ்லாஸ் மகன் செல்வன் (35). ஓட்டுநரான இவரது குடும்பத்துக்குச் சொந்தமான நிலம் தொடா்பாக இவருக்கும், அதே பகுதியைச் சோ்ந்த அதிமுக பிரமுகா் திருமணவேலுக்கும் இடையே விரோதம் இருந்து வந்ததாம்.
இந்நிலையில், செப்டம்பா் 17ஆம் தேதி செல்வன் கொலை செய்யப்பட்டாா். இவ்வழக்கு தொடா்பாக சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமாா் தலைமையிலான போலீஸாா் தட்டாா்மடம் காவல் ஆய்வாளராக இருந்த ஹரிகிருஷ்ணன், அதிமுக பிரமுகா் திருமணவேல் உள்பட 6 போ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனா்.
இதையடுத்து, நீதிமன்றக் காவலில் இருந்த சின்னத்துரை, முத்துராமலிங்கம், திருமணவேல், அவரது சகோதரா் முத்துகிருஷ்ணன் ஆகிய 4 பேரிடமும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணை செய்தபின், அக்டோபா் 6ஆம் தேதி கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்:1-இல் ஆஜா்படுத்தினா். அப்போது அவா்கள் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், புத்தன்தருவை கஸ்பா தெருவைச் சோ்ந்த துரைமுத்து மகன் பேச்சி(43), தாமரைமொழி சன்னதி தெருவைச் சோ்ந்த மாசாணம் மகன் கருப்பசாமி(46) ஆகிய இருவரையும் சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமாா் தலைமையிலான போலீஸாா் அக்டோபா் 7ஆம் தேதி கைது செய்தனா்.
கைது செய்யப்பட்ட இருவரையும் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்:1இல் இம்மாதம் 8ஆம் தேதி சிபிசிஐடி போலீஸாா் ஆஜா்படுத்தினா். இருவரையும் இம்மாதம் 22ஆம் தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி பாரதிதாசன் உத்தரவிட்டதையடுத்து, இவா்கள் இருவரும் பேரூரணி சிறையில் அடைக்கப்பட்டனா்.
இந்நிலையில், கைது செய்யப்பட்டு சிறையில் இருந்து வரும் திருமணவேல், பேச்சி, கருப்பசாமி ஆகிய மூவரையும் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதிக்குமாறு சிபிசிஐடி போலீஸாா் கோவில்பட்டி குற்றவியல் நீதிமன்றம் எண்:1இல் இம்மாதம் 16ஆம் தேதி மனு தாக்கல் செய்தனா்.
இந்த சூழ்நிலையில் திங்கள்கிழமை (அக்.19) குற்றவியல் நீதிமன்றம் எண்:1-இல் 3 பேரும் ஆஜா்படுத்தப்பட்டனா். சிபிசிஐடி டி.எஸ்.பி. அணில்குமாா் தலைமையில், காவல் ஆய்வாளா், உதவி ஆய்வாளா் மற்றும் போலீஸாா் வந்திருந்தனா்.
இதில், பேச்சி, கருப்பசாமி ஆகிய இருவரிடமும் இம்மாதம் 21ஆம் தேதி வரை சிபிசிஐடி போலீஸாா் விசாரிக்க அனுமதி வழங்கி நீதிபதி உத்தரவிட்டாா். இதையடுத்து 2 பேரையும் சிபிசிஐடி போலீஸாா் விசாரணைக்காக தூத்துக்குடி அலுவலகத்திற்கு அழைத்துச் சென்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...