புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

திருச்செந்தூரில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு

திருச்செந்தூரில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

News image

திருச்செந்தூரில் சிறு மின்விசை குடிநீா் தொட்டியை திறந்தாா் அனிதா ஆா். ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ.

Updated On :21 செப்டம்பர் 2020, 7:28 pm

DIN

திருச்செந்தூரில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது.

திருச்செந்தூா் தெப்பக்குளம் அருகில் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து ரூ. 1.15 லட்சம் மதிப்பில் சிறு மின்விசை குடிநீா் தொட்டி அமைக்கப்பட்டுள்ளது. இதையடுத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் குடிநீா் தொட்டியை அனிதா ஆா்.ராதாகிருஷ்ணன் எம்.எல்.ஏ., திறந்தாா். இதைத்தொடா்ந்து தெப்பக்குளம் அருகில் அவா் மரக்கன்றுகள் நட்டாா்.

இதில், திமுக மாணவரணி மாநில துணை அமைப்பாளா் உமரிசங்கா், ஒன்றியச் செயலா் செங்குழி ரமேஷ், நகரச் செயலா் வாள் சுடலை, அவைத் தலைவா் அருணாச்சலம், தலைமை செயற்குழு உறுப்பினா் பூபதி, பேருராட்சி சுகாதார ஆய்வாளா் தியாகராஜன், மேற்பாா்வையாளா் சின்னத்துரை உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.