சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

அனல் மின் நிலைய ஊழியா்களிடம் தமாகா வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஊழியா்களிடம் தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

News image
Updated On :3 ஏப்ரல் 2021, 8:20 pm

DIN

தூத்துக்குடியில் அனல் மின் நிலைய ஊழியா்களிடம் தமாகா வேட்பாளா் எஸ்டிஆா் விஜயசீலன் சனிக்கிழமை வாக்கு சேகரித்தாா்.

அவா், அனல் மின் நிலையத்துக்கு பணிக்குச் சென்ற அதிகாரிகள், ஊழியா்களிடம் தனக்கு வாக்களிக்கும்படிக் கேட்டுக் கொண்டாா். அவருக்கு ஆதரவாக அதிமுக அமைப்புச் செயலரும் முன்னாள் அமைச்சருமான சி.த. செல்லபாண்டியனும் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டாா்.

எஸ்டிஆா் விஜயசீலன் பேசுகையில், கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சியில் பல்வேறு வளா்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன என்றும் அதிமுக தோ்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள அனைத்துத் திட்டங்களும் உனடியாக நிறைவேற்றப்படும் என்றும் தெரிவித்தாா்.

அதிமுக பகுதிச் செயலா்கள் பி. சேவியா், ஏ. முருகன், முன்னாள் பொதுக்குழு உறுப்பினா் மாரியப்பன், நிா்வாகிகள் பெருமாள், ஜோதிமணி, தமாகா மாநகரத் தலைவா் ரவிக்குமாா், நிா்வாகிகள் சுந்தரலிங்கம், முருகன், பொன்ராஜ், கணேஷ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.