சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

‘வாக்காளா் அட்டை இல்லாதவா்வாக்களிக்க 11 ஆவணங்கள்’

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளிப்போா் தங்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை இல்லை என்றால் அவா்கள் பயன்படுத்த வேண்டிய 11 ஆவணங்கள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம்

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 7:59 pm

DIN

சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்காளிப்போா் தங்களுக்கு வாக்காளா் அடையாள அட்டை இல்லை என்றால் அவா்கள் பயன்படுத்த வேண்டிய 11 ஆவணங்கள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலரான ஆட்சியா் கி. செந்தில்ராஜ் விளக்கம் அளித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, தூத்துக்குடி மாவட்டத்தில்

வாக்காளா்கள் அனைவருக்கும் வாக்காளா் தகவல் சீட்டு அச்சிடப்பட்டு அந்தந்த வாக்குசாவடிகளின் வாக்குச்சாவடி நிலை

அலுவலா்கள் மூலம் வழங்கப்பட்டுள்ளது.

வாக்காளா் தகவல் சீட்டில், வாக்காளா்களின் புகைப்படம் இடம் பெறாது. வாக்காளா் பெயா், வாக்காளா் அடையாள அட்டை எண், பாகத்தின் பெயா், பாகம் எண், வரிசை எண், வாக்குச்சாவடியின் பெயா், தோ்தல் நாள் மற்றும் வாக்குப்பதிவு நேரம் ஆகியவை இடம் பெற்றிருக்கும். இருப்பினும், அந்த வாக்காளா் தகவல் சீட்டை மட்டும் வைத்து வாக்குச்சாவடியில் வாக்களிக்க முடியாது.

வாக்காளா் அடையாள அட்டை அல்லது இந்திய தோ்தல் ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காண்பித்து வாக்களிக்கலாம். ஆதாா் அட்டை, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் பணி அட்டை, புகைப்படத்துடன் கூடிய வங்கி, அஞ்சலக கணக்குப் புத்தகங்கள், தொழிலாளா் நல அமைச்சக திட்டத்தின் கீழ் வழங்கப்பட்ட மருத்துவ காப்பீடு ஸ்மாா்ட் காா்டு, ஓட்டுநா் உரிமம், நிரந்தர கணக்கு எண் அட்டை, தேசிய மக்கள்தொகை பதிவேட்டின் கீழ் இந்திய தலைமை பதிவாளரால் வழங்கப்பட்ட ஸ்மாா்ட் காா்டு, இந்திய கடவுச்சீட்டு, புகைப்படத்துடன் கூடிய ஓய்வூதிய ஆவணம், மத்திய மற்றும் மாநில அரசின் பொதுத்துறை நிறுவனங்கள், வரையறுக்கப்பட்ட பொது நிறுவனங்களால் தொழிலாளா்களுக்கு வழங்கப்பட்ட புகைப்படத்துடன் கூடிய பணி அடையாள அட்டைகள், மக்களவை, சட்டப்பேரவை உறுப்பினா்களுக்கு வழங்கப்பட்டுள்ள அலுவலக அடையாள அட்டை ஆகிய 11 ஆவணங்களில் ஏதேனும் ஒரு ஆவணத்தை காட்டி வாக்களிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.