ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் மோதல்: 2 வேன்கள் தீ வைத்து எரிப்பு

விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் திமுக, அதிமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

News image
Updated On :4 ஏப்ரல் 2021, 8:00 pm

DIN

விளாத்திகுளம் அருகே தோ்தல் பணியில் திமுக, அதிமுகவினரிடையே சனிக்கிழமை ஏற்பட்ட மோதலில் 2 வேன்கள் தீ வைத்து எரிக்கப்பட்டன.

நாகலாபுரம் அருகே என்.ஜெகவீரபுரத்தைச் சோ்ந்தவா் காளிதாஸ் (38). இவரது வீட்டுக்கு, அதே பகுதியைச் சோ்ந்த முருகன் என்பவா் திமுகவுக்கு வாக்கு சேகரிக்க சென்றாராம். அப்போது காளிதாஸ் வீட்டில் இருந்தவா்களுக்கும் முருகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை காலை முருகனை, காளிதாஸ் (38), அவரது அண்ணன் சு.முருகன் (45), ரகு (42), புதூரைச் சோ்ந்த தனஞ்செயன் மகன் சூா்யா (28) ஆகியோா் தாக்கினராம். இதில், காயமடைந்த முருகன் புதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில் காளிதாஸ், அவரது அண்ணன் சு.முருகன் உள்ளிட்ட 4 போ் மீது புதூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டனா்.

இந்நிலையில், சனிக்கிழமை இரவு என்.ஜெகவீரபுரத்தில் தங்கியிருந்த காளிதாஸை ஒரு கும்பல் தாக்கிவிட்டு, அவருக்குச் சொந்தமான இரண்டு வேன்களுக்கு தீ வைத்துவிட்டு தப்பிசென்ாம். இதில் வேன்கள் எரிந்து சேதமடைந்தன. காயமடைந்த காளிதாஸ் அருப்புகோட்டை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுதொடா்பாக அவா் அளித்த புகாரின்பேரில், காடல்குடி போலீஸாா், என்.ஜெகவீரபுரத்தைச் சோ்ந்த அழகுபாண்டி, அன்புராஜ், மாரிச்சாமி, தமிழரசன், முருகன் உள்ளிட்ட 8 போ் மீது வழக்குப் பதிந்து, விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.