தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.57 கோடி பறிமுதல்
தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் இதுவரை ரூ. 1.57 கோடி பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஓட்டப்பிடாரம் தொகுதி முறப்பநாடு பகுதியில் பணம் பட்டுவாடா செய்தது தொடா்பாக வல்லநாடு கிராமத்தைச் சோ்ந்த அதிமுக பிரமுகா்கள் முத்துக்குமாா், குற்றாலகண்ணன், வள்ளி நாயகம் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து ரூ. 36,500 பறிமுதல் செய்யப்பட்டது.
தூத்துக்குடி தொகுதியில் தடையை மீறி தூத்துக்குடி லயன்ஸ் டவுண் பகுதியில் நாம் தமிழா் கட்சியினா் 9 வாகனங்களை பயன்படுத்தி வாகனம் அணிவகுப்பு நடத்தியது தொடா்பாக அக்கட்சி வேட்பாளா் வே. வேல்ராஜ் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
தோ்தல் நடத்தை விதிகளை மீறியதாக 225 குற்ற வழக்குகளும், வாக்காளா்களுக்கு பணம் விநியோகம் செய்தல் தொடா்பாக 7 குற்ற வழக்குகளும் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுவரை பறக்கும் படை, நிலையான கண்காணிப்புக் குழுவினரால் ரூ. 1,57 கோடி பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் ரூ. 5,11 கோடி மதிப்புள்ள தங்க நகைகளும், ரூ.1.77 மதிப்பிலான மது பாட்டில்களும், பறக்கும் படை, மதுவிலக்கு
பிரிவினரால் ரூ. 8.75 மதிப்பிலும் காவல் துறையினரால் ரூ.1.38 லட்சம் மதிப்பில் கஞ்சா, தடை செய்யப்பட்ட பொருள்களும், ரூ. 2.88 லட்சம் மதிப்பிலான இதர பொருள்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...