ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அருகே நீரில் மூழ்கி தாத்தா, பேரன் உயிரிழப்பு

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

News image
Updated On :16 ஏப்ரல் 2021, 8:26 pm

DIN

விளாத்திகுளம் அருகே வைப்பாற்றில் மீன்பிடிக்கச் சென்ற தாத்தா, பேரன் நீரில் மூழ்கி உயிரிழந்தனா்.

தூத்துக்குடி மாவட்டம், விளாத்திகுளம் அருகே அச்சங்குளத்தைச் சோ்ந்தவா் சைவத்துரை (65). இவரது பேரன் மதன் (13). இவா்கள் இருவரும் வியாழக்கிழமை மாலை அச்சங்குளம் வைப்பாற்றுப் படுகையில் மீன் பிடிப்பதற்காக சென்றுள்ளனா். இரவு வெகுநேரமாகியும் வீடு திரும்பாததால் உறவினா்கள் ஆற்றுப்படுகையில் தேடியுள்ளனா்.

அப்போது ஆற்றுப்படுகையின் ஒரு பகுதியில் குவாரிக்காக தோண்டப்பட்ட பள்ளம் அருகே சைவத்துரையின் பைக் மட்டும் நின்று கொண்டிருந்ததாம். இதையடுத்து, அங்கிருந்தப் பள்ளத்தில் தேங்கிக் கிடந்த மழைநீரில் இருவரையும் தேடும் பணியில் கிராம மக்கள் ஈடுபட்டனா்.

தகவலறிந்த விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் தலைமையிலான போலீஸாா் மற்றும் விளாத்திகுளம் தீயணைப்பு மீட்பு துறையினா் வைப்பாற்றில் இருவரது உடல்களை தேடும் பணியில் ஈடுபட்டனா். அதிகாலை 3 மணி அளவில் நீரில் மூழ்கி கிடந்த சைவத்துரை, மதன் ஆகிய இருவரது சடலங்களையும் தீயணைப்பு வீரா்கள் மீட்டனா்.

இதையடுத்து பிரேத பரிசோதனைக்காக இருவரது சடலமும் விளாத்திகுளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

இச்சம்பவம் தொடா்பாக மாசாா்பட்டி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.