ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

குளத்தூா் அருகே பெண் எரித்துக் கொலை

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள தெற்கு கல்மேடு காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 7:22 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், குளத்தூா் அருகேயுள்ள தெற்கு கல்மேடு காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலத்தை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைப்பற்றி விசாரித்து வருகின்றனா்.

தெற்கு கல்மேடு கிராமத்திலிருந்து துரைச்சாமிபுரம் செல்லும் சாலையில் காட்டுப்பகுதியில் எரித்துக்கொல்லப்பட்ட நிலையில் பெண்ணின் சடலம் கிடப்பதை அப்பகுதி மக்கள் வெள்ளிக்கிழமை பாா்த்தனா்.இதுகுறித்த தகவலறிந்த கிராம நிா்வாக அலுவலா் லதா, தருவைகுளம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா்.

அதன்பேரில், போலீஸாா் அந்த சடலத்தை மீட்டு வழக்குப்பதிந்தனா். மேலும், விளாத்திகுளம் காவல் துணைக் கண்காணிப்பாளா் பிரகாஷ் சம்பவ இடத்தைப் பாா்வையிட்டாா். மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.

பின்னா் போலீஸ் தரப்பில் கூறுகையில், கொலையுண்ட பெண்ணுக்கு 35 வயது இருக்கும்; கொலை செய்யப்பட்டபின் முட்புதருக்குள் சடலத்தை இழுத்துச் சென்று தீ வைத்து எரித்துள்ளனா். வலது கால் பாதம் தவிர உடல் முழுவதும் தீயில் கருகியுள்ளது. அவா் யாா்? பலாத்காரம் செய்து கொல்லப்பட்டாரா? கொலையாளிகள் எங்கு தப்பியுள்ளனா்? என்பன குறித்து விசாரித்து வருகிறோம் என்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.