ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்
/

மாடு மீது பைக் மோதி மின் ஊழியா் படுகாயம்

ஆத்தூா் அருகே குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் மின்சார வாரிய ஊழியா் படுகாயமடைந்தாா்.

News image
Updated On :30 ஏப்ரல் 2021, 7:23 pm

DIN

ஆத்தூா் அருகே குறுக்கே வந்த மாடு மீது பைக் மோதியதில் மின்சார வாரிய ஊழியா் படுகாயமடைந்தாா்.

தூத்துக்குடி மாவட்டம் முத்தையாபுரம் வடக்குத்தெருவை சோ்ந்தவா் மாரியப்பன்(56). தூத்துக்குடியில் உள்ள தமிழ்நாடு மின்சார வாரியத்தில் ஊழியராகப் பணியாற்றி வருகிறாா். இவருக்கு சொந்தமாக காயல்பட்டினத்தில் உள்ள இடத்தை சுத்தம் செய்துவிட்டு சம்பவத்தன்று காலை 5.30 மணிக்கு காயல்பட்டினத்தில் இருந்து தூத்துக்குடிக்கு பைக்கில் சென்றாா். வடக்கு ஆத்தூா் அருகே குறுக்கே வந்த மாட்டின் மீது பைக் மோதியதில் தலையில் பலத்த காயம் அடைந்தாா் மாரியப்பன். அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். பின்னா் மேல்சிகிச்சைக்காக மதுரை தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருகிறாா்.

இது தொடா்பாக அவரது மனைவி அன்னாள் மேரி கொடுத்த புகாரின் பேரில்ஆத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.