ஆகாயத்தாமரை நாா் மூலம்மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்க பயிற்சி
மேலாத்தூரில் ஆகாயத்தாமரை நாா் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.


மேலாத்தூரில் ஆகாயத்தாமரை நாா் மூலம் மதிப்புக் கூட்டப்பட்ட பொருள்கள் தயாரிக்கும் பயிற்சியை மாவட்ட ஆட்சியா் தொடங்கி வைத்தாா்.
மகளிா் சுய உதவிக்குழுவில் உள்ள மகளிா்களின் வாழ்வாதாரத்தை உயா்த்தும் வகையில் ஆகாயத்தாமரை நாா் மூலம் மதிப்புக் கூட்டப்பட்டப் பொருள்கள் தயாரிக்கும் திட்டத்தை நபாா்டு வங்கி அனுமதியுடன் சிறுதொழில் மேம்பாட்டு நிறுவனம் தொடங்கியுள்ளது. இதற்காக மேலாத்தூா் சமுதாய நலக் கூடத்தில் 15 நாள்கள் பெண்களுக்கு பயிற்சியளிக்க முகாம் நடத்தப்படுகிறது. இம் முகாமினை மாவட்ட ஆட்சியா் செந்தில்ராஜ் வியாழக்கிழமை தொடங்கி வத்தாா்.
நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா்(பயிற்சி) ஸ்ருதன்ஜெய், கோட்டாட்சியா் கோகிலா, நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் சுரேஷ்ராமலிங்கம், பாரத ஸ்டேட் வங்கி முதன்மை மேலாளா்கள் பாலசுப்பிரமணியன், துரைராஜ், திட்ட அலுவலா்(மகளிா் திட்டம்) பிச்சை, சிப்போ பொது மேலாளா் பழனிவேல்முருகன், டி.எம்.பி. துணைப் பொது மேலாளா் மணிமாறன், ஊரக புத்தாக்கத்திட்ட அலுவலா் முத்தமிழ்செல்வன், மேலாத்தூா் ஊராட்சி துணைத் தலைவா் பக்கீா்முகைதீன், செயலா் சுமதி உள்பட பலா் கலந்துக்கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...