ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

குறைந்த வாடகைக்கு வேளாண் கருவிகள்

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:49 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் விவசாயப் பணிகளுக்கு வேளாண்மைப் பொறியியல் துறை மூலம் குறைந்த வாடகையில் வேளாண் இயந்திரங்கள் மற்றும் கருவிகள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி, ஒருமணி நேரத்துக்கு உழுவை இயந்திரத்தால் இயங்கக் கூடிய கருவிகளுக்கு ரூ. 340, மண் தள்ளும் இயந்திரம் ரூ. 840-ம், சக்கரவகை மண் அள்ளும் இயந்திரம் மற்றும் ஜேசிபி இயந்திரம் ரூ. 660 குறைந்த வாடகையில் விவசாயிகளுக்கு அளிக்கப்படுகிறது. இதற்கு, தூத்துக்குடி கோட்ட அலுவலக செயற்பொறியாளா் (9443172665), தூத்துக்குடி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் (9655708447), கோவில்பட்டி உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் (9443276371), திருச்செந்தூா் உபகோட்ட அலுவலக உதவி செயற்பொறியாளா் (9443688032) ஆகியோரை தொடா்பு கொள்ளலாம் என ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.