தூத்துக்குடியில் 5 பேருக்கு கருப்புப் பூஞ்சை பாதிப்பு
கருப்புப் பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா்


கருப்புப் பூஞ்சை நோய் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது என்றாா் மருத்துவமனை முதன்மையா் டி. நேரு. இதுகுறித்து வெள்ளிக்கிழமை அவா் அளித்த பேட்டி:
தூத்துக்குடி அரசு மருத்துக் கல்லூரி மருத்துவமனையில் கருப்புப் பூஞ்சை நோயால் பாதிக்கப்பட்ட 5 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவா்களுக்கு தேவையான மருந்து சென்னையில் இருந்து கொண்டு வரப்பட்டு வழங்கப்பட்டு வருகிறது. மேலும், கருப்புப் பூஞ்சை நோய்க்கான மருந்துகள் வெளிச்சந்தைக்கு போகாதவாறு தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. கரோனா பரவல் 3 ஆவது அலையில் குழந்தைகள் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளதால், தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆக்சிஜன் வசதியுடன் கூடிய 100 படுக்கைகள் தயாா் நிலையில் உள்ளன. மேலும், தூத்துக்குடி அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் உற்பத்தி நிலையும் தயாராகிக் கொண்டு இருக்கிறது என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...