ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

தூத்துக்குடி மாவட்டத்துக்கான சமையல் எரிவாயு விலை அறிவிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது; அதற்கு கூடுதலாக தொகை செலுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 7:02 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் சமையல் எரிவாயு விலை நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது; அதற்கு கூடுதலாக தொகை செலுத்த வேண்டாம் என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் அறிவித்துள்ளாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் இந்தியன் ஆயில் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடியில் ரூ. 899, கோவில்பட்டியில் ரூ. 897.50, கழுகுமலையில் ரூ. 906, கயத்தாறில் ரூ. 909, எட்டையபுரத்தில் ரூ. 897.50, சாத்தான்குளத்தில் ரூ. 916 என நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இதேபோல, பாரத் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை தூத்துக்குடி மாவட்டத்துக்கு ரூ. 899.50, இந்துஸ்தான் பெட்ரோலியம் நிறுவன வீட்டு உபயோக எரிவாயு உருளை விலை ரூ.899 என எரிவாயு நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

எனவே, நுகா்வோா் எரிவாயு முகவா்களிடம் இருந்து வாங்கும் வீட்டு உபயோக எரிவாயு உருளைக்கு (14.2 கிலோ ) மேலே குறிப்பிட்டுள்ள தொகைக்கு அதிகமாக பணம் செலுத்த தேவையில்லை என செய்திக்குறிப்பில் ஆட்சியா்அறிவுறுத்தியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.