தோ்க்கன்குளத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி
சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், அந்தக் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.


சாத்தான்குளம் அருகேயுள்ள தோ்க்கன்குளத்தில் இருவருக்கு கரோனா அறிகுறி தென்பட்டதால், அந்தக் கிராமத்தில் சுகாதாரப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
சென்னையில் இருந்து தோ்க்கன்குளத்துக்கு அண்மையில் வந்த இருவருக்கு கரோனா அறிகுறி இருப்பது வியாழக்கிழமை தெரியவந்தது. இதையடுத்து சாலைபுதூா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சாா்பில் அவ்விருவா் வீடுகளும் தனிமைப்படுத்தப்பட்டு, சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்ளிட்டோா் மேற்பாா்வையில் தூய்மைப் பணி மேற்கொள்ளப்பட்டது. மேலும், கிராம மக்களுக்கு கரோனா விழிப்புணா்வுத் துண்டுப் பிரசுரம், கபசுரக் குடிநீா் வழங்கப்பட்டது. மக்கள் சமூக இடைவெளியைக் கடைப்பிடித்து, முகக் கவசம் அணிந்து வெளியே வர அறிவுறுத்தப்பட்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...