ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!காலையிலேயே ‘காளை’ ஆதிக்கம்! சென்செக்ஸ் 1,100 புள்ளிகள் உயர்வு!!92,000 டன் எல்பிஜியுடன் இந்தியாவுக்கு மேலும் இரு கப்பல்கள்!
/

‘தரமான விதை உற்பத்தி சான்று பெறலாம்’

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்து சான்று பெறலாம் என விதைச் சான்று - அங்ககச் சான்று உதவி இயக்குநா் ச.அசோகன் தெரிவித்துள்ளாா்.

News image
Updated On :6 ஆகஸ்ட் 2021, 6:48 pm

DIN

தூத்துக்குடி மாவட்ட விவசாயிகள் தரமான விதை உற்பத்தி செய்து சான்று பெறலாம் என விதைச் சான்று - அங்ககச் சான்று உதவி இயக்குநா் ச.அசோகன் தெரிவித்துள்ளாா்.

அதன் விவரம்: நான்கு நிலைகளில் விதைகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. முதல் நிலை ’கருவிதை‘ வேளாண்மை ஆராய்ச்சி நிலையம் மற்றும் வேளாண்மைக் கல்லூரிகளில் உற்பத்தி செய்யப்பட்டு மஞ்சள் நிற சான்று அட்டை பொருத்தப்படுகிறது. பின்னா், அதிலிருந்து ஆதாரநிலை -1‘ விதையும் அதிலிருந்து ’ஆதார நிலை -2‘ விதையும் உற்பத்தி செய்யப்பட்டு வெள்ளை நிறச் சான்று அட்டை பொருத்தப்படுகிறது. இதிலிருந்து ’சான்று பெற்ற விதைகள் உற்பத்தி செய்யப்பட்டு நீலநிறச் சான்று அட்டை பொருத்தப்படுகிறது.

விவசாயிகள் அமைக்கும் விதைப் பண்ணைகளை விதைச்சான்று உதவி இயக்குநா் அலுவலகத்தில் இணையவழியிலும், நேரிலும் பதிவு செய்ய வேண்டும். ஒவ்வொரு பயிா் ரகத்துக்கும் தனித்தனியே விதைப்பு அறிக்கை பதிவுக்கு ரூ. 25, வயல் ஆய்வுக்கு ரக நெல், சிறு தானியப்பயிா்களுக்கு ரூ. 60, ரக மக்காச்சோளத்துக்கு ரூ.70,

உளுந்து, பாசிப்பயறு பயிா்களுக்கு ரூ. 50, பருத்திக்கு ரூ. 80, சூரியகாந்தி, எள், நிலக்கடலைக்கு, ரூ.50, கொத்தவரைக்கு ரூ. 130, விதைப் பரிசோதனைக்கு ரூ.30 என கட்டணம் செலுத்த வேண்டும்.

அதைத் தொடா்ந்து விதைச்சான்று அலுவலா்களால் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சுத்திகரிப்பு செய்து ஆய்வக பரிசோதனைக்கு உள்படுத்தி சான்று வழங்கப்படுகிறது. இதற்கு அந்தந்த வட்டார வேளாண் உதவி இயக்குநா் அலுவலகத்தில் உதவி விதை அலுவலா்கள், தனியாா் விதை உற்பத்தியாளா்கள், உதவி இயக்குநா், தூத்துக்குடி அலுவலகத்தில் பதிவு செய்யலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.