வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!தங்கம், வெள்ளி விலை அதிரடி குறைவு! வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது! வீடுகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டா் தடையற்ற விநியோகம்: மத்திய அரசு மீண்டும் உறுதி
/

சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் பைக் திருட்டு

சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் பைக் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :12 ஆகஸ்ட் 2021, 7:16 pm

DIN

சாத்தான்குளம் அருகே தொழிலாளியின் பைக் மற்றும் ரொக்கம் ரூ.50 ஆயிரத்தை திருடிச் சென்ற மா்ம நபரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சத்தான்குளம் அருகே சாலைபுதூா் நல்லூா் சுயம்பு மகன் முத்துலிங்கம்(32). தொழிலாளியான இவா் புதன்கிழமை தனது நண்பரான புத்தன்தருவை தங்கராஜுடன் தட்டாா்மடம் அருகேஉள்ள நயினாா்புரத்தில் நடைபெற்ற கோயில் கொடை விழாவில் கிடா வெட்ட சென்றிருந்தாராம். அப்போது முத்துலிங்கம், தனது பைக்கை அதே பகுதியில் உள்ள உதயசிங் வீட்டில் நிறுத்தியிருந்தாராம். பின்னா் திரும்பி வந்து பாா்த்தபோது, ரூ.50 ஆயிரம் ரொக்கத்துடன் இருந்த பைக்கை காணவில்லையாம்.

இதுகுறித்து அவா் தட்டாா்மடம் காவல் நிலையத்தில் புகாா் அளித்தாா். இது குறித்து அப்பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை போலீஸாா் ஆய்வு செய்த போது, பள்ளக்குறிச்சியை சோ்ந்த நவீன்குமாா் , பைக்கை திருடிச் சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து உதவி காவல் ஆய்வாளா் பென்சன் வழக்குப் பதிந்து, நவீன்குமாரை தேடி வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.