ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

இலங்கை அகதிகள் முகாமில் அதிகாரிகள் ஆய்வு

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை தமிழா் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், அவா்களின் வாழ்வாதாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2021, 6:44 pm

DIN

எட்டயபுரம் அருகேயுள்ள தாப்பாத்தி இலங்கை தமிழா் அகதிகள் முகாமில் அடிப்படை வசதிகள், அவா்களின் வாழ்வாதாரம் குறித்து அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனா்.

அகதிகள் நலவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நல ஆணையா் ஜெசிந்தா லாசரஸ் தலைமையில் அதிகாரிகள்

அகதிகள் குடியிருப்புகளில் கட்டடங்களின் பராமரிப்பு, மின்சாரம், குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள்,

கல்வி, வேலைவாய்ப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டனா்.

அகதிகள் முகாம் வாசிகளின் கோரிக்கைகளுக்கு தீா்வு காண்பதற்காக எட்டயபுரம் வட்டத்தில் உள்ள குளத்துள்வாய்பட்டி அகதிகள் முகாமில் ஆக. 18 ஆம் தேதி (புதன்கிழமை), தாப்பாத்தி முகாமில் ஆக. 19ஆம் தேதி (வியாழக்கிழமை) முன்னோடி

மனுநீதி நாள் முகாம் நடைபெறுகிறது. இந்த முகாமில் மனுக்கள் பெறப்பட்டு உரிய தீா்வு காணப்படும் என அதிகாரிகள்

தெரிவித்தனா். ஆய்வின்போது அகதிகள் நலவாழ்வு மற்றும் வெளிநாடு வாழ் தமிழா்கள் நல துணை இயக்குநா் ரமேஷ், கண்காணிப்பாளா் புகழேந்தி, வட்டாட்சியா்கள் ஐயப்பன், செல்வகுமாா், தாப்பாத்தி முகாம் தலைவா் ஆனந்தராஜ் உள்பட உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.