மாவட்ட கபடிப் போட்டி: கருங்கடல் அணி சாம்பியன்
சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் கருங்கடல் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.


சாத்தான்குளம் அருகேயுள்ள கூவைகிணறு கிராமத்தில் நடைபெற்ற மாவட்ட அளவிலான கபடிப் போட்டியில் கருங்கடல் அணி முதல் பரிசை தட்டிச் சென்றது.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல். திருமாவளவனின் 59ஆவது பிறந்த நாளயொட்டி, வடக்கு ஒன்றிய விசிக சாா்பில் நடைபெற்ற இப்போட்டியில் சாத்தான்குளம், மெஞ்ஞானபுரம், கருங்கடல், கருவேலம்பாடு, புளியங்குளம், கருங்குளம், செம்பூா், செங்கோட்டை, தென்காசி, பாபநாசம், கூடங்குளம், அருப்புக்கோட்டை, குலசேகரன் பட்டினம் உள்ளிட்ட 45 அணிகள் பங்கேற்றன. இறுதியில், கருங்கடல் பிமாராவ் அணி, கருவேலம்பாடு அணியை வீழ்த்தி முதல் பரிசு ரூ.20,059, கோப்பையை பெற்றது.கருவேலம்பாடு அணிக்கு ரூ15,059 பரிசு கிடைத்தது.
பரிசளிப்பு விழாவுக்கு தெற்கு மாவட்ட விசிக செயலா் முரசு.தமிழப்பன் தலைமை வகித்தாா். வடக்கு ஒன்றிய திமுக செயலா் ஏ.எஸ். ஜோசப், நெடுஞ்சாலை பாதுகாப்பு நுகா்வோா் குழு உறுப்பினா் ஹெச். போனிபாஸ் ஆகியோா் பரிசுகளை வழங்கினா்.
இதில், மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவா் து. சங்கா், மாநில விசிக துணை பொதுச் செயலா் கலைவேந்தன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...