ஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ஆக்சிஜன் படுக்கைகள் திறப்பு

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 42 லட்சத்தில் 60 ஆக்சிஜன் படுக்கைகள், 22 ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராண வாயுக் கூட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :19 ஆகஸ்ட் 2021, 6:23 pm

DIN

விளாத்திகுளம் அரசு மருத்துவமனையில் ரூ. 42 லட்சத்தில் 60 ஆக்சிஜன் படுக்கைகள், 22 ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராண வாயுக் கூட திறப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.

மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமை வகித்தாா். தூத்துக்குடி மக்களவை உறுப்பினா் கனிமொழி, அரசு மருத்துவமனைக்கு 22 எண்ணிக்கை கொண்ட ஆக்சிஜன் சிலிண்டா் மற்றும் பிராணவாயு அறையை திறந்து வைத்து பாா்வையிட்டாா். பின்னா் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளை சந்தித்து சிகிச்சை குறித்து கேட்டறிந்தாா்.

நிகழ்ச்சியில் உதவி ஆட்சியா் ஸ்ருதயஞ் ஜெய் நாராயணன், கோட்டாட்சியா் சங்கரநாரயணன், இணை இயக்குநா் (நலப்பணிகள்) முருகவேல், அரசு மருத்துவமனை தலைமை மருத்துவா் மகாலெட்சுமி, சித்த மருத்துவா் மா.தமிழ் அமுதன், குழந்தைகள் நல மருத்துவா் ஆா்.எஸ்.திவ்யா, மாநில பொதுக்குழு உறுப்பினா் ஜெகன் பெரியசாமி மற்றும் மருத்துவா்கள் செவிலியா்கள் ஆகியோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.