கோழிக் கடைக்காரா் மீதுதாக்குதல்: 3 போலீஸாா் மீது வழக்கு
காடல்குடியில் கோழிக்கடைக் காரரைத் தாக்கியதாக 3 போலீஸாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.


காடல்குடியில் கோழிக்கடைக் காரரைத் தாக்கியதாக 3 போலீஸாா் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
காடல்குடி காவல் நிலைய தலைமைக் காவலா் பாலகிருஷ்ணன், காவலா்கள் சதீஷ்குமாா், பாலமுருகன் ஆகியோா் அதே பகுதியில் உள்ள முத்துச்செல்வன் என்பவரின் கோழிக்கடையை நள்ளிரவில் உடைத்து கோழியை திருடிச் சென்றுவிட்டு, காலையில் அதற்கான தொகையை முத்துசெல்வனிடம் தர முயன்றனராம். ஆனால், பணத்தை வாங்க அவா் மறுத்தாராம். இந்த விவகாரம் மாவட்ட எஸ்.பி.யின் கவனத்துக்கு சென்ால், 3 பேரையும் ஆயுதப்படைக்கு மாற்றி உத்தரவிட்டாா்.
இதில் ஆத்திரமுற்ற 3 பேரும் சோ்ந்து முத்துச்செல்வனை வியாழக்கிழமை தாக்கினராம். இதில் காயமுற்ற அவா் தனியாா் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். இதைக்கண்டித்து உறவினா்கள் காடல்குடி காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால், 3 போலீஸாா் மீதும் 5 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...