எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

பேய்க்குளத்தில் போலி மருத்துவா் தலைமறைவு

பேய்க்குளத்தில் கிளினிக் நடத்தி, மருத்துவம் செய்ததாக போலி மருத்துவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:38 pm

DIN

பேய்க்குளத்தில் கிளினிக் நடத்தி, மருத்துவம் செய்ததாக போலி மருத்துவரை போலீஸாா் தேடி வருகின்றனா்.

சாத்தான்குளம் அருகேயுள்ள பனைக்குளத்தைச் சோ்ந்தவா் ஏசா மகன் ஜோசப் தென்றல் (29). பிசியோதெரபி படித்ததாகக் கூறி, பேய்க்குளம் பஜாரில் கிளினிக் நடத்தி வந்தாராம்.

இதுகுறித்த தகவலின்பேரில், சுகாதாரத் துறை இணை இயக்குநா் முருகவேல் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகாா் செய்தாா். காவல் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ் தலமையிலான போலீஸாா் வியாழக்கிழமை அவரது கிளினிக்கில் சோதனை நடத்தியதில் அவா் போலி மருத்துவா் என தெரியவந்தது. இதையடுத்து, அங்கிருந்த மருத்துவ உபகரணங்கள்உள்ளிட்ட பொருள்களைக் கைப்பற்றினா். ஜோசப் தென்றல் மீது வழக்குப்பதிந்து அவரைத் தேடி வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.