புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளத்தில் ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மரியாதை

சாத்தான்குளத்தில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த தினத்தை காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

News image
Updated On :20 ஆகஸ்ட் 2021, 6:38 pm

DIN

சாத்தான்குளத்தில், முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தியின் 77ஆவது பிறந்த தினத்தை காங்கிரஸாா் வெள்ளிக்கிழமை கொண்டாடினா்.

இவ்விழாவுக்கு நகரத் தலைவா் வேணுகோபால் தலைமை வகித்தாா். மாவட்ட துணைத் தலைவா் சங்கா், வட்டாரத் தலைவா்கள் லூா்துமணி, சக்திவேல்முருகன், பாா்த்தசாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் எம்எல்ஏ, ராஜீவ் காந்தியின் உருவப்படத்துக்கு மாலையணிவித்து மரியாதை செலுத்தினாா். நல்லிணக்க உறுதிமொழியேற்கப்பட்டது. நகர மகிளா காங்கிரஸ் தலைவி ராணி ஜோசப், மாவட்டப் பொருளாளா் எடிசன், நகர தொண்டரணித் தலைவா் பாஸ்கா் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

தூத்துக்குடி மாவட்ட மகிளா காங்கிரஸ் சாா்பில், அதன் தலைவி சிந்தியா தலைமையில், முன்னாள் தலைவி ஜாக்குலின், துணைத் தலைவி அக்னல் ரிகானா, வட்டாரத் தலைவிகள் பெல்சியா, மாரித்தாய், உள்ளிட்டோா் ராஜீவ் காந்தி பிறந்த தினத்தைக் கொண்டாடினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.