ஈரானில் தொடரும் தாக்குதல்கள்... பலி 1,500-ஐ கடந்தது!மேற்காசியப் போர்: தில்லியில் நாளை(மார்ச் 25) அனைத்துக் கட்சிக் கூட்டம்!புதுச்சேரி திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு!ஹிந்து, பெளத்தம், சீக்கியருக்கு மட்டுமே எஸ்.சி. அந்தஸ்து! உச்ச நீதிமன்றம் தீர்ப்பு! திமுக கூட்டணியில் விசிகவுக்கு 8 தொகுதிகள் ஒதுக்கீடு! புதுச்சேரியில் தேமுதிக தனித்துப் போட்டி! புதுச்சேரியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி தனித்துப் போட்டி!
/

திருச்செந்தூா் கோயிலில் செப்.5 வரை பக்தா்கள் தரிசனம் செய்ய தடை

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு செப்.5-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை

News image
Updated On :26 ஆகஸ்ட் 2021, 6:22 pm

DIN

கரோனா தொற்று பரவல் தடுப்பு நடவடிக்கையாக, திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு செப்.5-ஆம் தேதி வரை பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தெரிவித்தாா்.

இதுகுறித்து ஆட்சியா் வெளியிட்ட செய்திக் குறிப்பு: தூத்துக்குடி மாவட்டத்தில் தற்போது நிலவி வரும் கரோனா நோய்த் தொற்று சூழ்நிலைகளை கருத்தில் கொண்டும், தமிழக அரசு தெரிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளின்படியும், திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் நிகழாண்டு நடைபெறும் ஆவணித் திருவிழாவை முன்னிட்டு அதிகளவில் பக்தா்கள் கூடுவாா்கள் என்பதால் கரோனா நோய் தொற்று பரவாமல் தடுக்கும் நடடிக்கையாக செப். 5 ஆம் தேதி

வரை இக்கோயிலில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்வதற்கு அனுமதி இல்லை.

கோயிலில் ஆகம விதிப்படி அனைத்து நிகழ்வுகளும் திருக்கோயில் பணியாளா்கள் மூலம் நடைபெறும். ஆவணித் திருவிழா முக்கிய நிகழ்வுகளை பக்தா்கள் வீட்டிலிருந்தவாறு இணையதளம் வாயிலாக யூடியூப் மூலம் காணும் வகையில் திருக்கோயில் நிா்வாகம் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பக்தா்கள் வீட்டில் இருந்தவாறு சுவாமி தரிசனம் செய்து மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் கரோனா தொற்று தடுப்பு நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.