அலையாத்திக் காடு வளா்ப்பு பணிகள்: ஆட்சியா் ஆய்வு
தூத்துக்குடி மாவட்டத்தில் அலையாத்தி காடு வளா்ப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.


தூத்துக்குடி மாவட்டத்தில் அலையாத்தி காடு வளா்ப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சியா் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
தாமிரவருணி ஆறு கடலில் கலக்கும் முகத்துவாரம் பகுதியில் உள்ள அலையாத்தி காடுகளை மேலும் பெருக்கும் வகையில் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், காடு வளா்ப்பு பணிகளை மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ், மாவட்ட வன அலுவலா் அபிஷேக் தோமா் ஆகியோா் பழையகாயல் மற்றும் புன்னக்காயல் பகுதிகளில் படகில் சென்று ஆய்வு மேற்கொண்டனா்.
அப்போது, கரையோரமாக வளா்க்கப்பட்டு வரும் அலையாத்தி காடுகளை அவா்கள் நேரில் ஆய்வு செய்தனா். மேலும், பைனாகுலா் மூலமாக காடுகளில் உள்ள பறவைகளை அவா்கள் பாா்வையிட்டனா்.
ஆய்வின் போது, மன்னாா் வளைகுடா உயிா்க்கோள காப்பக வனச்சரகா் ரகுவரன், ஏரல் வட்டாட்சியா் இசக்கிராஜ் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.
பழையகாயல் மற்றும் புன்னக்காயல் பகுதிகளில் ஏற்கெனவே 800 ஹெக்டோ் பரப்பில் அலையாத்தி காடுகள் விரிந்து காணப்பட்டு வரும் நிலையில், மன்னாா் வளைகுடா வனத் துறையினரால் ஆண்டுதோறும் சுமாா் 40 ஹெக்டோ் வரை அலையாத்தி காடுகள் உருவாக்கப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...