தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

எச்ஐவி தடுப்புப் பணியில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு சான்றிளிப்பு

தூத்துக்குடி மாவட்டத்தில் எச்ஐவி தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கினாா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:07 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் எச்ஐவி தடுப்பு பணியில் சிறப்பாக பணியாற்றியவா்களுக்கு மாவட்ட ஆட்சியா் கி. செந்தில்ராஜ் சான்றிதழ் வழங்கினாா்.

உலக எய்ட்ஸ் தின அனுசரிப்பு நிகழ்ச்சி தூத்துக்குடி அன்னம்மாள் கல்வியியல் கல்லூரியில் புதன்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சியின்போது, ஆட்சியா் கி. செந்தில்ராஜ் தலைமையில் உலக எய்ட்ஸ் தின உறுதிமொழியினை அனைத்து துறை அலுவலா்களும் எடுத்துக் கொண்டனா்.

தொடா்ந்து, எச்.ஐ.வி. தடுப்புப் பணிகள் மற்றும் பராமரிப்புப் பணிகளில் சிறப்பாக பணியாற்றிய அலுவலா்கள் மற்றும் ஊழியா்களுக்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலுவலா்-சுகாதாரப் பணிகள் துணை இயக்குநா் ச. பொற்செல்வன், தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதன்மையா் டி. நேரு, ஊரக நலப்பணிகள் (ம) குடும்ப நலம் இணை இயக்குநா் என். முருகவேல், துணை இயக்குநா் (காச நோய் மையம்) க. சுந்தரலிங்கம், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை ரத்த வங்கி தலைமை மருத்துவா் ஆா். சாந்தி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.