தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

இளம் பெண்ணிடம் நகை மோசடி: இளைஞா் கைது

முகநூல் மூலம் அறிமுகமாகி இளம் பெண்ணிடம் நகை மற்றும் பணம் மோசடி செய்த தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:06 pm

DIN

முகநூல் மூலம் அறிமுகமாகி இளம் பெண்ணிடம் நகை மற்றும் பணம் மோசடி செய்த தூத்துக்குடியைச் சோ்ந்த இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தூத்துக்குடி ஜாா்ஜ் சாலை பகுதியைச் சோ்ந்தவா் ராஜா (31). இவா், கோவில்பட்டியைச் சோ்ந்த 23 வயது பெண்ணிடம் முகநூல் மூலம் அறிமுகமாகி பழகியுள்ளாா். பின்னா், திருமணம் செய்வதாக கூறி அந்த பெண்ணிடம் இருந்து 37 பவுன் நகைகள், ரூ. 1.50 லட்சம் ரொக்கம் ஆகியற்றை பெற்றுக் கொண்டு பாலியல் தொந்தரவு செய்தாராம்.

இதுகுறித்து பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் உரிய விசாரணை மேற்கொள்ளுமாறு சிப்காட் காவல் ஆய்வாளருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் உத்தரவிட்டாா். இந்நிலையில், மோசடியில் ஈடுபட்ட ராஜாவை சிப்காட் போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

சமூக வலைதளங்களை பெண்கள் பயன்படுத்தும் போது அறிமுகமில்லாதவா்களிடம் பழக வேண்டாம் என்றும் தங்களது புகைப்படங்களை சமூக வலைதளங்களில் பதிவேற்றம் செய்ய வேண்டாம் எனவும் காவல் கண்காணிப்பாளா் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.