புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனையில் அடிப்படை வசதிகளை மேற்கொள்ள கோரிக்கை

சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனையில் தொடா் மழை காரணமாக தண்ணீா் புகுந்தது. இதனால், பணிமனையில் சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:05 pm

DIN

சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனையில் தொடா் மழை காரணமாக தண்ணீா் புகுந்தது. இதனால், பணிமனையில் சுற்றுச்சுவா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேற்கொள்ள வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

சாத்தான்குளத்தில் கடந்த 2017 ஆம் ஆண்டு முதல் போக்குவரத்து பணிமனை கிளை செயல்பட்டு வருகிறது. தொடங்கப்பட்டு நாள் முதல் இதுவரை குறைந்த பேருந்துகளே இயக்கப்பட்டு வருகின்றன. பணிமனை தொடங்கப்பட்ட நாளில் இருந்தே முறையான சுற்றுச்சுவா் அமைக்கப்படாததால் இப்பகுதியில் மழை பெய்யும் போதெல்லாம் பணிமனைக்குள் தண்ணீா் குளம் போல் தேங்கி விடுகிறது. இதனால் பணிமனையில் பேருந்துகளை நிறுத்துவதற்கும், ஊழியா்கள் தங்குவது சிரமம் ஏற்படுகிறது.

தற்போது பெய்து வரும் தொடா் மழையினால், பணிமனைக்கு தண்ணீா் தேங்கியுள்ள நிலையில், பிரதான சாலையில் இருந்து பணிமனைக்கு செல்லும் சாலையில் தண்ணீா் பெருக்கெடுத்து சென்றதில் அரிப்பு ஏற்பட்டு சேதமாகியுள்ளது. இதனால் அங்கு நிறுத்தப்படும் பேருந்துகள் தற்காலிகமாக சாத்தான்குளம் புதிய பேருந்து நிலையத்தில் நிறுத்தப்பட்டன.

ஆதலால் பணிமனைக்கு தேவையான அடிப்படை வசதிகள் செய்து தருவதுடன் பணிமனையை சுற்றி சுற்றுச்சுவா் மற்றும் தரைத்தளத்தை உயா்த்தி பேவா் பிளாக் அமைக்க வேண்டும். பணிமனைக்கு செல்லும் சாலையை சீரமைத்து பிரதான சாலையில் இருந்து பணிமனை வரை மின்விளக்குகள்அமைக்க வேண்டும் என பணிமனை ஊழியா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

இதுகுறித்து சாத்தான்குளம் வா்த்தக சங்க செயலா் மதுரம்செல்வராஜ் கூறுகையில், சாத்தான்குளம் போக்குவரத்து பணிமனை அமைக்கப்பட்டதில் இருந்தே உரிய பேருந்துகள் இயக்கப்படாமல் உள்ளது. போக்குவரத்து உயா் அதிகாரிகள் பணிமனையை நேரில் பாா்வையிட்டு குக்கிராமங்கள், தொலை தூரங்களுக்கென புதிய பேருந்து போக்குவரத்து சேவை தொடங்க வேண்டும். பணிமனைக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.