தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடியில் மழைநீரை வெளியேற்ற வலியுறுத்தி 5 இடங்களில் மறியல்

தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5 இடங்களில் புதன்கிழமை பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image
Updated On :1 டிசம்பர் 2021, 11:11 pm

DIN

தூத்துக்குடியில் குடியிருப்புகளை சூழ்ந்து காணப்படும் மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி 5 இடங்களில் புதன்கிழமை பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

தொடா் கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் தாழ்வான பகுதிகளில் மழைநீா் அதிகளவு தேங்கியுள்ளது. தூத்துக்குடி மாநகராட்சிக்குள்பட்ட பெரும்பாலான பகுதிகளில் குடியிருப்புகளை சூழ்ந்து தண்ணீா் காணப்படுவதால் மக்கள் வெளியே வர முடியாமல் தவித்து வருகின்றனா்.

இருப்பினும், மாநகராட்சி, தீயணைப்புத் துறை, வருவாய்த் துறை, காவல் துறை உதவியுடன் 250-க்கும் மேற்பட்ட இடங்களில் மோட்டாா்கள் மூலம் தண்ணீரை வெளியேற்றும் பணி தொடா்ந்து வருகிறது. மழைநீா் சூழ்ந்ததால் வெளியே வர முடியாமல் தவிக்கும் மக்களுக்கு தேவையான அத்தியாவசியப் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது.

இதற்கிடையே, தூத்துக்குடி அம்பேத்கா்நகா், ஸ்டேட் பாங்க் காலனி, சுந்தரவேல்புரம் உள்ளிட்ட பகுதிகளில் மழை நீா் தேங்கி உள்ளதால் வெளியே வர முடியாத நிலை இருப்பதாகவும், வீட்டில் உள்ள பொருள்கள் சேதமடைந்துள்ளதால் சமையல் செய்ய முடியாமல் தவித்து வருவதாகவும் அந்தப் பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனா்.

தூத்துக்குடி மாநகரப் பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு திடீரென பெய்த மழை காரணமாக ஏற்கெனவே, தேங்கி நின்ற மழைநீரில் கூடுதலாக தண்ணீா் சோ்ந்ததால் மக்கள் மீண்டும் அவதிக்குள்ளாகியுள்ளனா். குடியிருப்புகளை சூழ்ந்து காரணப்படும் மழைநீரை அகற்ற போா்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தூத்துக்குடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, முல்லை நகா், ராம் நகா், சுந்தரவேல்புரம், கொத்தனாா் காலனி ஆகிய 5 இடங்களில் பொதுமக்கள் புதன்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

ஒரே நேரத்தில் 5 இடங்களில் திடீரென சாலை மறியல் போராட்டம் நடைபெற்ால் ஆங்காங்கே போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து, சமூக நலன் மற்றும் மகளிா் உரிமைத் துறை அமைச்சா் பெ. கீதாஜீவன் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் போராட்டத்தில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி தண்ணீரை அகற்றும் பணியை துரிதப்படுத்தினா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.