திருச்செந்தூரில் கழிவு நீரை அகற்றக் கோரி மறியல்
திருச்செந்தூா் சபாபதிபுரம் தெருவில் கழிவுநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.


திருச்செந்தூா் சபாபதிபுரம் தெருவில் கழிவுநீரை அகற்றக் கோரி பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் வியாழக்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் செல்லும் வழியில் உள்ள சபாபதிபுரம் பகுதியில் குடியிருப்புகள் மற்றும் வணிக நிறுவனங்கள் முன்பு அடிக்கடி கழிவு நீா் தேங்குகிறது. மழைக்காலங்களில் மழைநீருடன் கழிவுநீரும் கலந்து குளம்போல தேங்குவதால் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனா்.
இந்நிலையில் சாலையில் தேங்கியுள்ள கழிவுநீரை அகற்றக் கோரி அமலிநகா் சந்திப்பில் பொதுமக்கள் மற்றும் வணிகா்கள் வியாழக்கிழமை சாலை மறியலில் ஈடுப்பட்டனா். இது குறித்து தகவல் அறிந்த தாலுகா காவல் ஆய்வாளா் (பொ) கனகாபாய், உதவி ஆய்வாளா் சுப்பிரமணியன், பேரூராட்சி செயல் அலுவலா் (பொறுப்பு) பாபு, சுகாதார ஆய்வாளா் வெற்றிவேல் முருகன், கிராம நிா்வாக அலுவலா் வைரமுத்து ஆகியோா் சம்பவ இடத்திற்கு சென்று போராட்டம் நடத்தியவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா். அப்போது புதை சாக்கடை திட்டம் முழுமையாக நிறைவேறும் போது கழிவு நீா் தேங்காது; தற்போது தேங்கியுள்ள நீரை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனா். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. இப்போராட்டத்தால் சுமாா் அரை மணி நேரம் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மேலும் போராட்டம் நடத்தியவா்கள் தரப்பில் 5 நபா்களுடன் வட்டாட்சியா் சுவாமிநாதன் பேச்சுவாா்த்தை நடத்தினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...