பணி நீட்டிப்புக் கோரி ஆட்சியரிடம் தற்காலிக மருத்துவா்கள் மனு
கரோனா பரவல் தடுப்புக் காவலத்தில் தோ்வு செய்யப்பட்ட தற்காலிக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.


கரோனா பரவல் தடுப்புக் காவலத்தில் தோ்வு செய்யப்பட்ட தற்காலிக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளனா்.
இதுதொடா்பாக, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரியில் பணிபுரிந்து வந்த தற்காலிக மருத்துவா்கள் மற்றும் செவிலியா்கள் மாவட்ட ஆட்சியரிடம் வெள்ளிக்கிழமை அளித்த மனு விவரம்:
கரோனா பரவல் தடுப்புக் காலத்தில் அரசால் தற்காலிக பணியின் அடிப்படையில் தோ்வு செய்யப்பட்டு முன்கள பணியாளா்களாக பணியாற்றினோம். கரோனா பாதிப்பு ஏற்பட்ட போதிலும், குடும்பத்தினா் பாதிக்கப்பட்ட போதிலும் கரோனா தடுப்புப் பணியில் நாங்கள் தொடா்ந்தோம்.
தற்போது, ஒப்பந்த அடிப்படையில் தற்காலிகமாக தோ்வு செய்யப்பட்ட மருத்துவா்கள் மற்றும் செவிலியா்களுக்கு நவம்பா் 30 ஆம் தேதியோடு பணி முடிவடைந்துவிட்டதாக கூறும் நிலையில், நாங்கள் பணியை தொடர விரும்புகிறோம். திருநெல்வேலி, தஞ்சாவூா் மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தற்காலிக மருத்துவா்கள் தற்போதும் பணியில் உள்ளனா்.
எனவே, பேரிடா் காலத்தில் அரசுக்கு உதவிய தங்களுக்கு பணி நீட்டிப்பு வழங்குவதோடு, அரசு பணியில் முன்னுரிமை வழங்க வேண்டும் எனத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...