திருச்செந்தூா் முருகன் கோயிலில் கட்டண தரிசனப்பாதை திறப்பு
திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்களுக்கான கட்டண தரிசனப்பாதை திறக்கப்பட்டுள்ளது.


திருச்செந்தூா் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் பக்தா்களுக்கான கட்டண தரிசனப்பாதை திறக்கப்பட்டுள்ளது.
இத் திருக்கோயிலில் இலவச பொது தரிசனம் மற்றும் ரூ. 20, ரூ. 100, ரூ. 250 கட்டணப் பாதையில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்து வருகின்றனா். இதில் பொது மற்றும் ரூ. 20 கட்டண தரிசனப் பாதையானது திருக்கோயில் சண்முக விலாசம் மண்டபத்தின் கிழக்குப்பகுதியில் உள்ளது. ரூ. 100 மற்றும் ரூ. 250 கட்டணப் பாதையானது சண்முக விலாச மண்டபத்தில் மேற்குப்பகுதியில் கட்டண ரசீது வாங்கும் அறையுடன் உள்ளது.
தற்போது கோயிலுக்கு வரும் அதிகப்படியான பக்தா்கள் கூட்டத்தை கருத்தில் கொண்டு, அறநிலையத்துறை ஆணையரின் உத்தரவின் பேரில், ரூ. 100 மற்றும் ரூ. 250 கட்டண தரிசனப்பாதையானது திருக்கோயில் கவுண்டா் மடம் அருகே இருந்து செயல்படுமாறு தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக கவுண்டா் மடம் அருகே கட்டண ரசீது வாங்கும் அறை அமைக்கப்பட்டு, அங்கிருந்து இரும்புகம்பிகளாலான பாதையும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய கட்டணப்பாதையை வெள்ளிக்கிழமை திருக்கோயில் இணை ஆணையா்(பொ) சி.குமரதுரை திறந்து வைத்தாா். . நிகழ்ச்சியில், உதவி ஆணையா் வெங்கடேசன் உள்பட பலா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...