சாஸ்தாவிநல்லூா் கூட்டுறவு சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம்
சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளையில் அமைந்துள்ள சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.


சாத்தான்குளம் அருகே பொத்தக்காலன்விளையில் அமைந்துள்ள சாஸ்தாவிநல்லூா் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கத்தில் நிதியியல் கல்வி முகாம் புதன்கிழமை நடைபெற்றது.
சங்கத் தலைவா் ஏ. லூா்துமணி தலைமை வகித்தாா். சங்கச் செயலா் ராஜகுமாா் வரவேற்றாா். இதில், சாஸ்தாவிநல்லூா் ஊராட்சித் தலைவி திருக்கல்யாணி, சாத்தான்குளம் தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு கடன் சங்கச் செயலா் எட்வின் தேவாசீா்வாதம், புத்தன்தருவை தொடக்க வேளாண்மைக் கூட்டுறவு சங்கச் செயலா் அருள்தாஸ் ஆகியோா் பங்கேற்று, கூட்டுறவு சங்க செயல்பாடு, மக்களின் பங்களிப்பு குறித்துப் பேசினாா்.
சங்க நிா்வாகக்குழு உறுப்பினா்கள் ரவிச்சந்திரன், இருதயராஜ், உஷா, ஆனந்தி உள்ளிட்ட பலா் பங்கேற்றனா். சங்க உதவிச் செயலா் பெனிஸ்கா் நன்றி கூறினாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...