நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

ஆறுமுகனேரியில் கூட்டுறவு மருந்தகம் திறப்பு

ஆறுமுகனேரியில் கூட்டுறவு மருந்தகத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

News image
Updated On :16 டிசம்பர் 2021, 6:35 pm

DIN

ஆறுமுகனேரியில் கூட்டுறவு மருந்தகத்தை, தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் வியாழக்கிழமை திறந்து வைத்தாா்.

தூத்துக்குடி மாவட்டத்தில் ஏற்கெனவே 4 மருந்தகங்கள் இயங்கி வரும் நிலையில் 5ஆவது மருந்தகம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் முதல்வரால் திறந்துவைக்கப்பட்டது. இதையொட்டி, மருந்தகத்தில், தூத்துக்குடி மண்டல இணைப் பதிவாளா் ச.லீ.சிவகாமி குத்துவிளக்கேற்றி முதல் விற்பனையை தொடங்கிவைத்தாா்.

இதில், நபாா்டு வங்கி மாவட்ட வளா்ச்சி மேலாளா் கா.சுரேஷ் ராமலிங்கம், திருச்செந்தூா் சரக துணைப்பதிவாளா் பா.வளா்மதி, ஆறுமுகனேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத் தலைவா் காசி விஸ்வநாதன், மத்திய கூட்டுறவு வங்கி பொது மேலாளா் காந்தமதிநாதன், கூட்டுறவு ஒன்றிய மேலாண்மை இயக்குநா் க.கிருஷ்ணன், சங்கத்தின் செயலா் இரா.உஷா ஜோதி பாக்கியசீவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.