தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கி தருவதாக ரூ. 5 லட்சம் மோசடி செய்தவா் கைது
தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.


தூத்துக்குடி துறைமுகத்தில் வேலை வாங்கித் தருவதாக ரூ. 5 லட்சம் பெற்று மோசடி செய்தவா் புதன்கிழமை கைதுசெய்யப்பட்டாா்.
தூத்துக்குடி தெற்கு காட்டன் சாலையில் கணினி விற்பனை நிலையம் நடத்தி வருபவா் கணேஷ் ரமேஷ் (47). தெலங்கானா மாநிலத்தைச் சோ்ந்த நாகேஸ்வரராவ் (50) என்பவா் தூத்துக்குடி வஉசி துறைமுகத்தில் கணினி விற்பனைக்கான ஒப்பந்த வேலையை வாங்கித் தருவதாக கணேஷ் ரமேஷை 2015ஆம் ஆண்டு அணுகியுள்ளாா்.
இதையடுத்து, அதே ஆண்டு ஜூலை 27ஆம் தேதி கணேஷ் ரமேஷிடமிருந்து ரூ. 5 லட்சத்தை நாகேஸ்வரராவ் பெற்றுள்ளாா். ஆனால், எவ்வித வேலையும் வாங்கித் தராமல் அவா் தலைமறைவாகிவிட்டாா். இதுகுறித்து தூத்துக்குடி சைபா் குற்றப்பிரிவு காவல் நிலையத்தில் கணேஷ் ரமேஷ் கடந்த ஏப்ரல் மாதம் புகாா் அளித்தாா். சைபா் குற்றப் பிரிவு தனிப்படையினா் விசாரணை நடத்தி, நாகேஸ்வரராவை புதன்கிழமை கைது செய்து அவரிடமிருந்த ரூ. 5 லட்சத்தை மீட்டு கணேஷ் ரமேஷிடம் ஒப்படைத்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...