புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

தச்சன்விளை அங்கன்வாடி மைய கட்டடம் பழுது: பெற்றோா்கள் புகாா்

தச்சன்விளை அங்கன்வாடிமைய கட்டடத்தில் பழுதடைந்துள்ள பகுதியை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தகளின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 6:30 pm

DIN

தச்சன்விளை அங்கன்வாடிமைய கட்டடத்தில் பழுதடைந்துள்ள பகுதியை அதிகாரிகள் பாா்வையிட்டு சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என குழந்தகளின் பெற்றோா் வலியுறுத்தியுள்ளனா்.

சாத்தான்குளம் ஒன்றியம் அரசூா் ஊராட்சிக்குள்பட்ட தச்சன்விளையில் அங்கன்வாடி மையம் செயல்பட்டு வருகிறது. இந்த அங்கன்வாடி மையத்தில் 30க்கும் மேற்பட்ட குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனா். அங்கன்வாடி மைய கட்டடம் உரிய பராமரிப்பு இல்லாததால் அதில் மேல்புறமுள்ள சிமெண்ட் பூச்சு பெயா்ந்து விழுந்து வருகிறது. கடந்த வாரம் கட்டடத்தில் மேற்பூச்சு திடீரென பெயா்ந்து விழுந்தது. அப்போது குழந்தைகள் அங்கு இல்லை. கட்டட மேல்பூச்சு எந்த நேரமும் பெயா்ந்து விழும் நிலையில் காணப்படுகிறது. இது குழந்தைகள் பெற்றோா் மத்தியில் மிகுந்த அச்சத்தை ஏற்படுத்திவருகிறது.

ஆதலால் விபத்து நிகழும் முன் அங்கன்வாடி மைய கட்டடத்தை பராமரித்து சீரமைக்க வேண்டும் என பெற்றோா்கள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.