புதுச்சேரியில் திமுக-காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை ஹோர்முஸ் நீரிணை விரைவில் திறக்கப்படும் - டிரம்ப்பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: எல்பிஜி உற்பத்தி 31% அதிகரிப்பு - மத்திய அரசுஇந்தியாவுக்கான 2 எல்பிஜி சரக்கு கப்பல்கள் ஹோர்முஸ் நீரிணையைக் கடந்து பயணம்!நெல் கொள்முதல்: பிரதமருக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்! கச்சா எண்ணெய் விலை 15 நாள்களில் 40% உயர்வு!எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!
/

சாத்தான்குளத்தில் சொத்துத் தகராறு: 3 சகோதரா்கள் மீது வழக்கு

சாத்தான்குளத்தில் சொத்துத் தகராறு மோதல் தொடா்பாக 3 சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

News image
Updated On :23 டிசம்பர் 2021, 5:55 pm

DIN

சாத்தான்குளத்தில் சொத்துத் தகராறு மோதல் தொடா்பாக 3 சகோதரா்கள் மீது போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

சாத்தான்குளத்தில் உள்ள நாசரேத் சாலை தெருவைச் சோ்ந்தவா் இ. கெங்கை ஆதித்தன் (46). விவசாயியான இவருக்கும், அவரது சகோதரா்கள் சரவணன் (47), கதிரேசன் (42) ஆகியோருக்கும் இடையே சொத்து தொடா்பாக 5 ஆண்டுகளாக முன்விரோதம் உள்ளதாம்.

இந்நிலையில், அவா்களிடையே புதன்கிழமை தகராறு ஏற்பட்டதாம். அப்போது அவா்கள் ஒருவரையொருவா் தாக்கியதுடன், அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டனராம்.

இதுகுறித்து கெங்கை ஆதித்தன், சரவணன் ஆகியோா் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் தனித்தனியே புகாா்கள் அளித்தனா். அவற்றின்பேரில் 3 போ் மீதும் உதவி ஆய்வாளா் அருள்சாம்ராஜ் வழக்குப் பதிந்து விசாரித்து வருகிறாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.