தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தமாக-வுக்கு 5 தொகுதிகள் ஒதுக்கீடுஜான் பாண்டியன் தலைமையிலான தமமுகவுக்கு ராஜபாளையம் (பொது) தொகுதி ஒதுக்கீடு!தே.ஜ. கூட்டணியில் தமாகவுக்கு 5 தொகுதிகள்!தமிழக தேர்தலில் திமுகவுக்கு முழு ஆதரவு! மக்கள் நீதி மய்யம் போட்டியிடாது - கமல்ஹாசன் எல்பிஜி, பெட்ரோல், டீசல் போதிய இருப்பு: விநியோகம் பாதிக்கப்படவில்லை! - மத்திய அரசுதேமுதிகவுக்கு 10 இடங்கள்! திமுகவுடன் ஒப்பந்தம் கையொப்பம்!மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகள் மறுவரையறை கூடாது - முதல்வர் மு. க. ஸ்டாலின் வலியுறுத்தல்ஒவ்வொரு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு விலையில்லா குளிர்பதனப் பெட்டி : அதிமுக வாக்குறுதிவங்கிகளில் பெற்ற கல்விக் கடன் தள்ளுபடி செய்யப்படும்: அதிமுக தேர்தல் வாக்குறுதிபெண்களைப் போல ஆண்களும் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணிக்கலாம் : அதிமுக வாக்குறுதி
/

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினா் 112 பேரின் சிறு தண்டனைகள் ரத்து

முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை 49 பேருக்கு அதற்கான ஆணையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வழங்கினாா்.

News image
Updated On :24 டிசம்பர் 2021, 7:18 pm

DIN

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் துறையினா் 112 பேரின் சிறு தண்டனைகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், முதல் கட்டமாக வெள்ளிக்கிழமை 49 பேருக்கு அதற்கான ஆணையை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வழங்கினாா்.

‘உங்கள் துறையில் முதல்வா்’ திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டக் காவல் துறையில் பணிபுரிவோா் தங்கள் மீது உள்ள சிறு தண்டனைகளை ரத்து செய்யுமாறு மனு அளித்தனா். அதன்படி, தூத்துக்குடி மாவட்டத்தில் அனைத்து காவல் நிலையங்களிலும் பணியாற்றும் 10 காவல் ஆய்வாளா்கள், 9 உதவி ஆய்வாளா்கள் உள்ளிட்ட 112 பேருக்கு சிறு தண்டனைகள் ரத்து செய்யப்பட்டது.

இதில், முதற்கட்டமாக 49 பேருக்கு சிறு தண்டனைகளை ரத்து செய்ததற்கான ஆணைகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் வெள்ளிக்கிழமை சம்பந்தப்பட்டவா்களிடம் வழங்கினாா்.

4 பேருக்கு பாராட்டு: தூத்துக்குடி மாவட்டத்தில் நிகழாண்டு இதுவரை 200 போ் மீது குண்டா் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை மேற்கொள்ள சிறப்பாக செயல்பட்ட சிறப்பு உதவி ஆய்வாளா் அசோக்குமாா், தலைமைக் காவலா்கள் சுப்பிரமணியன், சாமிநாத் மற்றும் ஆயுதப்படை காவலா் சுந்தவேல் ஆகியோருக்கு வெகுமதி மற்றும் சான்றிதழ்களை, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்வழங்கி, பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.