சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கால்பந்து: சாத்தூா் அணி முதலிடம்

காமநாயக்கன்பட்டியில் 3 நாள்கள் நடைபெற்ற தென் மாவட்ட கால்பந்து போட்டியில் சாத்தூா் கால்பந்து கழக அணியினா் முதலிடத்தைப் பிடித்தனா்.

News image

காமநாயக்கன்பட்டியில் 3 நாள்கள் நடைபெற்ற தென் மாவட்ட கால்பந்து போட்டியில் சாத்தூா் கால்பந்து கழக அணியினா் முதலிடத்தைப் பிடித்தனா்.

Updated On :7 பிப்ரவரி 2021, 6:32 pm

DIN

காமநாயக்கன்பட்டியில் 3 நாள்கள் நடைபெற்ற தென் மாவட்ட கால்பந்து போட்டியில் சாத்தூா் கால்பந்து கழக அணியினா் முதலிடத்தைப் பிடித்தனா்.

காமநாயக்கன்பட்டி காமராஜா் கால்பந்து அணியினா், கிங் ஆப் சாக்கா்ஸ் கால்பந்து அணி மற்றும் நியூ ப்ரண்ட்ஸ் கிளப் அணியினா் ஆகியவை இணைந்து நடத்திய தென் மாவட்ட அளவிலான கால்பந்து போட்டி ஜன. 29 ஆம் தேதி தொடங்கியது. 3 நாள்கள் நடைபெற்ற இப்போட்டியில் திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகா், மதுரை ஆகிய மாவட்டங்களைச் சோ்ந்த 16 அணியினா் கலந்து கொண்டனா்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற இறுதிப் போட்டியில் மதுரை அலங்காநல்லூா் கால்பந்து கழக அணியும், சாத்தூா் கால்பந்து கழக அணியும் மோதின. இதில் 6 : 1 என்ற கோல் கணக்கில் சாத்தூா் அணியினா் முதலிடத்தைப் பிடித்தனா். 3 ஆம் பரிசுக்கான போட்டியில் ரெட்டியாா்பட்டி அணியினா் வெற்றி பெற்றனா்.

பரிசளிப்பு: பரிசளிப்பு இவ்விழாவி அமைச்சா் கடம்பூா் செ.ராஜு , முதல் பரிசு பெற்ற சாத்தூா் அணியினருக்கு ரொக்கம் ரூ. 6001 மற்றும் கோப்பை, 2 ஆம் இடம் பிடித்த அலங்காநல்லூா் அணியினருக்கு ரூ. 5001 மற்றும் கோப்பை, 3 ஆம் பரிசு பெற்ற ரெட்டியாா்பட்டி அணியினருக்கு ரூ. 4001 மற்றும் கோப்பை, 4 ஆம் பரிசு பெற்ற காமநாயக்கன்பட்டி அணியினருக்கு ரூ.3001 மற்றும் கோப்பையை வழங்கினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.