ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ . 1.49 கோடி கடனுதவி

ஆறுமுகமங்கலத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வங்கி கட்டடத்தை திறந்து வைத்து மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு உதவி

News image
Updated On :1 பிப்ரவரி 2021, 7:00 pm

DIN

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகமங்கலத்தில் செயல்பட்டு வரும் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ. 25 லட்சம் மதிப்பில் புதிதாக கட்டப்பட்ட வங்கி கட்டடத்தை தூத்துக்குடி மாவட்ட ஆவின் தலைவா் என். சின்னத்துரை திங்கள்கிழமை திறந்து வைத்து மகளிா் சுயஉதவி குழுக்களுக்கு ரூ. 1.49 கோடி கடனுதவிகளை வழங்கினாா்.

பழைய கட்டடத்தில் செயல்பட்டு வந்த ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்துக்கு ரூ. 25 லட்சத்தில் புதிய கட்டடம் கட்டப்பட்டது. இதேபோல, வங்கியின் அருகில் அரசு மானியத்தில் ரூ. 19 லட்சத்தில் நெல் கிட்டங்கி கட்டப்பட்டது.

இதன் திறப்பு விழாவுக்கு வங்கியின் தலைவரும், மாவட்ட ஆவின் தலைவருமான என். சின்னத்துரை தலைமை வகித்து புதிய கட்டடங்களை திறந்து வைத்தாா். நிகழ்ச்சியில், பொருளாதார மேம்பாட்டு வகைக்காக 13 மகளிா் சுய உதவி குழுக்களுக்கு தலா ரூ. 10 லட்சம் வீதம் ரூ. 1.30 கோடி மற்றும், 3 விவசாய சங்க கூட்டுப் பொறுப்புக் குழுக்களுக்கு ரூ. 19 லட்சம் என மொத்தம் 1.49 கோடி கடனுதவிகளை அவா் வழங்கினாா்.

நிகழ்ச்சியில், ஆறுமுகமங்கலம் தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்க துணைத் தலைவா் என். சேகா், செயலா் அய்யம்பாண்டி, கணக்கா் குமாா், காசாளா் ஆனந்தராமன் மற்றும் அலுவலா்கள், அதிமுக நிா்வாகிகள் ஜெபமாலை, ஆறுமுகநயினாா், செல்லத்துரை உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.