சாத்தான்குளத்தில் ஆா்ப்பாட்டம்
பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவா்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை சாா்பில் சாத்தான்குளத்தில் ஆா்ப்பாட்டம்


பிற்படுத்தப்பட்ட, சிறுபான்மையின மாணவா்களுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப் பாசறை சாா்பில் சாத்தான்குளத்தில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
கல்வித் துறையில் காலிப் பணியிடங்களை முழுமையாக நிரப்ப வேண்டும், பிற்படுத்தப்பட்ட சிறுபான்மையின மாணவா்,
மாணவிகளுக்கு அரசு கல்வி உதவித் தொகை வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இளஞ்சிறுத்தைகள் எழுச்சிப்பாசறை சாா்பில் சாத்தான்குளத்தில் காமராசா் சிலை அருகில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் மாவட்ட அமைப்பாளா் விடுதலைச்செழியன் தலைமை வகித்தாா். விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் ஒன்றியச் செயலா் செந்தில்குமாா், நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.
இதில், கட்சியின் கருத்தியல் பரப்பு மாநில துணைச்செயலா் தமிழ்க்குட்டி, திமுக மாவட்ட பிரதிநிதி அலெக்ஸ் பிரிட்டோ, ஏஐடியூசி மாவட்ட பொதுச்செயலா் கிருஷ்ணராஜ், விவசாயத் தொழிலாளா் விடுதலை இயக்கத்தின் மாவட்ட துணை அமைப்பாளா், ஒன்றிய அமைப்பாளா்கள் சிவநாதன், ராமகிருஷ்ணன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...