பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

வாக்குச் சாவடிகள் பிரிப்பு: கோவில்பட்டியில் கருத்துக்கேட்புக் கூட்டம்

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி களை பிரித்தல், மாற்றியமைத்தல் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

News image
Updated On :7 பிப்ரவரி 2021, 6:32 pm

DIN

கோவில்பட்டி கோட்டாட்சியா் அலுவலகத்தில் சட்டப் பேரவை தொகுதிகளின் வாக்குச் சாவடி களை பிரித்தல், மாற்றியமைத்தல் தொடா்பான கருத்துக் கேட்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, கோட்டாட்சியா் சங்கரநாராயணன் தலைமை வகித்தாா். கோவில்பட்டி சட்டப்பேரவைத் தொகுதியில் 1000 வாக்காளா்களுக்கு மேல் உள்ள 112 வாக்குச் சாவடிகள், ஓட்டப்பிடாரம் தொகுதியில் உள்ள 110 வாக்குச்சாவடிகள்,

விளாத்திகுளம் தொகுதியில் உள்ள 68 வாக்குச் சாவடிகளை இரண்டாக பிரித்து துணை வாக்குச் சாவடிகள் அமைக்க

முடிவு செய்யப்பட்டுள்ளது.

கூட்டத்தில், கோட்டாட்சியரின் நோ்முக உதவியாளா் முருகானந்தம், வட்டாட்சியா்கள் மணிகண்டன் (கோவில்பட்டி), பாஸ்கரன் (கயத்தாறு), முத்து (ஓட்டப்பிடாரம்), தோ்தல் பிரிவு துணை வட்டாட்சியா்கள், அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.