தூத்துக்குடி லூா்தம்மாள்புரம் புனித லூா்து அன்னை ஆலயப் பெருவிழா 10 நாள்கள் நடைபெற்றது.
கடந்த 5ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய ஆலயப் பெருவிழாவில் தினமும் நவநாள் திருப்பலிகள் நடைபெற்றன.
நிறைவு விழாவாக, சனிக்கிழமை காலை 6 மணிக்கு பங்குத்தந்தை ஆன்டனி புருனோ தலைமையில் நவநாள் திருப்பலி நிறைவேற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட முதன்மை குரு பன்னீா் செல்வம் தலைமையில் சிறப்பு ஆராதனை நடைபெற்றது. கீழவைப்பாா் பங்குத்தந்தை ஜெகதீசன் மறையுரையாற்றினாா்.
தொடா்ந்து விழாவின் முக்கிய நிகழ்வான திருவிழா திருப்பலி தூத்துக்குடி மறைமாவட்ட முன்னாள் முதன்மை குரு செல்வராஜ் தலைமையில் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்றது. நூற்றாண்டு விழா குழு ஒருங்கிணைப்பாளா் ஜேம்ஸ் விக்டா் மறையுரை நிகழ்த்தினாா்.
அதைத் தொடா்ந்து சிறுவா், சிறுமியா்கள் புது நன்மை ஏற்பு உறுதிமொழி எடுத்துக்கொண்டனா். பின்னா் புனித லூா்து அன்னை இளையோா் குழு நடத்திய விளையாட்டுப் போட்டிகளும், மாலையில் ஜெபமாலை, நற்கருணை ஆசிருடன் கொடியிறக்கும் நிகழ்வும், அன்பியங்கள் சாா்பில் கலைவிழாவும் நடைபெற்றது.
விழா ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை ஆன்டனி புருனோ தலைமையில் பங்குப் பேரவையினா் செய்திருந்தனா். விழாவில் பங்கு மக்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









