அரசூா் ஊராட்சியில் தேசிய குடும்ப நலகணக்கெடுப்பு தொடக்கம்
சாத்தான்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் அரசூா், முதலூா் ஊராட்சிகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.


சாத்தான்குளம் ஒன்றியத்தில் சென்னை எஸ்ஆா்எம் பல்கலைக்கழகம் சாா்பில் அரசூா், முதலூா் ஊராட்சிகள், சாத்தான்குளம் பேரூராட்சி பகுதிகளில் தேசிய குடும்ப நல கணக்கெடுப்பு பணி நடைபெற்றது.
அரசூா் ஊராட்சிக்குள்பட்ட அதிசயபுரத்தில், கணக்கெடுப்புப் பணியை ஊராட்சித் தலைவா் தினேஷ் ராஜசிங் தொடங்கிவைத்தாா்.
இதில், சுரேஷ் தலைமையிலான களப்பணியாளா்கள் வீடுகளுக்குச் சென்று வீட்டில் குடும்ப நலன்கள் குறித்த விவரங்கள், தேவையான தடுப்பூசி, குடும்ப கட்டுப்பாடு சிகிச்சை, வீட்டில் கழிப்பறை உள்ளிட்ட விவரங்களை கேட்டு பதிவு செய்தனா்.
இதில், ஆனந்தபுரம் சுகாதார ஆய்வாளா் ஜேசுராஜ் உள்பட பலா் கலந்துகொண்டனா். அரசூா், முதலூா், சாத்தான்குளத்தில் தலா 3 நாள்கள் இக்கணக்கெடுப்பு நடத்தி, ஆய்வு முடிவை மத்திய அரசிடம் சமா்ப்பிக்க உள்ளதாக கணக்கெடுப்பு குழுவினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...