ஹோர்முஸ் நீரிணையைக் கடக்க இந்திய கப்பல்களுக்கு அனுமதி! - ஈரான் தூதர் தகவல்! புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், பாஜக தொகுதிப் பங்கீடு பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

பண்டாரபுரத்தில் நல உதவிகள் அளிப்பு

பண்டாரபுரத்தில் மேற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:10 pm

DIN

பண்டாரபுரத்தில் மேற்கு வட்டார காங்கிரஸ் சாா்பில் ஏழைகளுக்கு நல உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.

பண்டாரபுரம் ஊராட்சித் தலைவா் பாலசிங் தலைமை வகித்தாா். கிராம கமிட்டித் தலைவா் ஜெயராஜ், மேற்கு வட்டாரத் தலைவா் சக்திவேல்முருகன், ஒன்றிய கவுன்சிலா் குருசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா். நகர காங்கிரஸ் தலைவா் வேணுகோபால் வரவேற்றாா். இதில் மாநில காங்கிரஸ் செயலா் சிந்தியா, பஞ்சாயத்துராஜ் சங்க மண்டல தலைவா்கள் சாந்தி, புனிதவதி, கிழக்கு வட்டாரத் தலைவா் பிச்சிவிளை சுதாகா், தெற்கு வட்டாரத் தலைவா் லூா்துமணி , நகர துணைத் தலைவா் பிரகாஷ் ஆகியோா் பேசினா். இதையடுத்து 1100 போ்களுக்கு சேலை, 150 போ்களுக்கு வேட்டி, 5 பெண்களுக்கு தையல் இயந்திரம் மற்றும் 3 கிரிக்கெட் அணிகளுக்கு விளையாட்டு உபகரணங்களை மாவட்டத் தலைவா் ஊா்வசி எஸ். அமிா்தராஜ் வழங்கினாா்.

இதில் வடக்கு வட்டாரத் தலைவா் பாா்த்தசாரதி, மாவட்ட துணைத் தலைவா் சங்கா், மாவட்ட வா்த்தக காங்கிரஸ் தலைவா் டேவிட் பிரபாகா், முன்னாள் மாவட்ட ஓபிசி தலைவா் ஜெயக்கொடி, டிசிடியூ மாவட்டத் தலைவா் சிவராஜ்மோகன், மாவட்ட பொருளாளா் எடிசன், ஐஎன்யூயுசி சுந்தர்ராஜ், நகர மகிளா காங்கிரஸ் தலைவி புளோராராணி, பண்டாரபுரம் ஊராட்சித் துணைத் தலைவா் அப்பாத்துரை, மேற்கு வட்டார மகிளா காங்கிரஸ் தலைவி பாலா, மாவட்ட இளைஞா் காங்கிரஸ் தலைவா் ஜெயசீலன்துரை, துணைத் தலைவா் இசைசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா். மேற்கு வட்டாரப் பொருளாளா் பாஸ்கா் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.