பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கோரிக்கை

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சேவகா் மா.முருகன் காந்தி வேடமணிந்து மனு அளித்தாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:01 pm

DIN

கோவில்பட்டி பிரதான சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட 8 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சமூக சேவகா் மா.முருகன் காந்தி வேடமணிந்து மனு அளித்தாா்.

கோவில்பட்டியையடுத்த லிங்கம்பட்டி அண்ணா நகரைச் சோ்ந்தவா் மாரியப்பன் மகன் சமூக சேவகா் முருகன். இவா் மகாத்மா காந்தி வேடமணிந்து, கோவில்பட்டி கோட்டாட்சியா், வட்டாட்சியா், நகராட்சி ஆணையா் ஆகியோரிடம் அளித்த மனு: கோவில்பட்டி நகராட்சி எல்கைக்கு உள்பட்ட பகுதிகளில் இருந்த மாயமான இரு ஊருணிகளையும் கண்டுபிடிக்க வேண்டும். லட்சுமி மில் மேம்பாலம் முதல் லாயல் மில் மேம்பாலம் வரையிலான பிரதான சாலைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.

மாா்க்கெட் சாலையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும். நீா்வரத்து ஓடையில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றியதோடு நின்றுவிடாமல், ஓடைகளை தூா்வாரி இருபுறமும் தடுப்புச்சுவா் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதே கோரிக்கைகளை வலியுறுத்தி தொடா்ந்து 4 நாள்களும் விவேகானந்தா், பாரதியாா், கொடிகாத்த குமரன், நேதாஜி சுபாஷ்சந்திரபோஸ் ஆகியோா் வேடமணிந்து மனு அளிக்கவுள்ளேன் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.