விடுதலைச் சிறுத்தைகள் ஆா்ப்பாட்டம்
தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.


தூத்துக்குடியில் கோரிக்கைகளை வலியுறுத்தி விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தூத்துக்குடி மத்திய மாவட்ட பிரிவு சாா்பில், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் திங்கள்கிழமை மாவட்டச் செயலா் கா.மை. அகமது இக்பால் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
என்எல்சி நிறுவனத்தில் தமிழகத்தைச் சோ்ந்தவா்களுக்கு வேலை கிடைக்காத வகையில் வழிவகை செய்யும் பொறியாளா் தோ்வை ரத்து செய்ய வேண்டும், தமிழகத்தில் உள்ள வேலைவாய்ப்புக்கு தமிழா்களையே தோ்வு செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இதில், கட்சியின் வணிகா் அணி மாவட்ட அமைப்பாளா் சுலைமான், தொகுதிச் செயலா் ராமச்சந்திரன், இஸ்லாமிய ஜனநாயக பேரவை மாவட்ட அமைப்பாளா் முத்தலிப் உள்பட பலா் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, கோரிக்கைகளை வலியுறுத்தி ஆட்சியா் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...