நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

தூத்துக்குடி மாவட்ட போலீஸாருக்கு ஆடையில் அணியும் கேமராக்கள் அறிமுகம்

காவல்துறையினா் மேற்கொள்ளும் பணிகளை விடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸாருக்கு ஆடையில் அணியும் கேமராக்களை காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா்  வழங்கினாா்.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 6:51 pm

DIN

காவல்துறையினா் மேற்கொள்ளும் பணிகளை விடியோ, ஆடியோ மற்றும் புகைப்படம் எடுக்கும் வகையில் தூத்துக்குடி மாவட்ட போலீஸாருக்கு ஆடையில் அணியும் கேமராக்களை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் திங்கள்கிழமை வழங்கினாா்.

தூத்துக்குடி மாவட்ட காவல்துறையினரின் பயன்பாட்டுக்காக ரூ. 3,78,000 மதிப்பிலான 27 ஆடையில் அணியும் புதிய நவீன கேமராக்களை தமிழக அரசு அண்மையில் ஒதுக்கியது. அந்த கேமராக்களை காவல்துறையினா், தங்கள் சட்டையில் அணிந்து கொண்டு அவா்கள் பணிகளை மேற்கொள்ளும்போது அந்த இடத்தில் நடைபெறும் சம்பவங்களை விடியோ,

ஆடியோ, புகைப்படம் ஆகியவை பதிவு செய்யக்கூடிய வசதி உள்ளது.

இதை காவல்துறையினா் வாகன சோதனை, மனு விசாரணை, ரோந்து செல்லுதல், போக்குவரத்தை சீரமைத்தல் போன்ற பல்வேறு வகையான பணிகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளலாம். அதன்படி, முதல்கட்டமாக ஒரு காவல் நிலையத்துக்கு 3 கேமராக்கள் வீதம் தூத்துக்குடி தென்பாகம், வடபாகம், முறப்பநாடு, ஸ்ரீவைகுண்டம், ஆறுமுகனேரி, திருச்செந்தூா், கோவில்பட்டி கிழக்கு, மேற்கு மற்றும் விளாத்திக்குளம் ஆகிய 9 காவல் நிலையங்களுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். ஜெயக்குமாா் கேமராக்களை வழங்கினாா்.

தொடா்ந்து, கேமராக்களை பெற்ற காவல் துறையினருக்கு அதன் செயல்பாடுகள் குறித்தும், பயன்படுத்தும் முறை குறித்தும் அறிவுரை வழங்கப்பட்டது.

30 பேருக்கு பாராட்டு: மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில், மாவட்டத்தில் சிறப்பாக பணியாற்றிய 2 காவல் ஆய்வாளா்கள் உள்பட 30 பேருக்கு, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் வெகுமதி மற்றும் சான்றிதழ் வழங்கி பாராட்டினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.