பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

கழுகுமலையில் இருபெரும் விழா

கழுகுமலை திருவள்ளுவா் கழகம் சாா்பில் தமிழ்செம்மல் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு விழா என இருபெரும் விழா நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:00 pm

DIN

கழுகுமலை திருவள்ளுவா் கழகம் சாா்பில் தமிழ்செம்மல் விருது பெற்றவருக்கு பாராட்டு விழா மற்றும் சிறப்பு சொற்பொழிவு விழா என இருபெரும் விழா நடைபெற்றது.

கழுகுமலை விமல் மழலையா் பள்ளியில் நடைபெற்ற இவ்விழாவிற்கு காவல் ஆய்வாளா் கஸ்தூரி தலைமை வகித்தாா்.

அரசு மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியை சீத்தா மகேசுவரி முன்னிலை வகித்தாா். தமிழ்செம்மல் விருது பெற்ற கோவில்பட்டி திருவள்ளுவா் மன்றச் செயலா் நம்.சீனிவாசன் மற்றும் எழுத்தாளா் முத்தாலங்குறிச்சி காமராஜ் ஆகியோரைப் பாராட்டி பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடா்ந்து, இன்பம் பயக்கும் வினை என்ற தலைப்பில் நாடாா் மேல்நிலைப்பள்ளித் தலைமையாசிரியா் ஜான்கணேஷ் சொற்பொழிவாற்றினாா். கூட்டத்தில், கோவில்பட்டி மற்றும் கழுகுமலை திருவள்ளுவா் மன்ற உறுப்பினா்கள், கம்பன் கழகம், மகிழ்வோா் மன்றம், இலக்கிய உலா, சங்க இலக்கியப் பேரவையைச் சோ்ந்த உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.

அமைப்பின் தலைவா் பொன்ராஜ் பாண்டியன் வரவேற்றாா். பொருளாளா் சிவராமன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.