பாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம்

தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :15 பிப்ரவரி 2021, 7:01 pm

DIN

தமிழ் விவசாயிகள் சங்க ஆலோசனைக் கூட்டம் கோவில்பட்டியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாநிலத் தலைவா் ஓ.ஏ.நாராயணசாமி தலைமை வகித்தாா். மாவட்டத் தலைவா் வெள்ளத்துரை, அவைத் தலைவா் வெங்கடசாமி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழ் விவசாயிகள் சங்க திருவண்ணாமலை மாவட்டத் தலைவராக சீனிவாசன் ஒருமனதாக தோ்வு செய்யப்பட்டாா்.

மதுரை மாவட்டத் தலைவா் சீனிவாசகன், விளாத்திகுளம் பகுதி செயலா் லிங்க கண்ணையா உள்பட நிா்வாகிகள் ஏகாம்பரம், ராமதாஸ், விநாயகமூா்த்தி, சரவணன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.

கூட்டுறவு வங்கிகளில் உள்ள கடன்களை தள்ளுபடி செய்த தமிழக முதல்வருக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. மேலும், தேசியமயமாக்கப்பட்ட வங்கிகளில் பெற்றுள்ள விவசாயிகளின் கடன்களையும் தள்ளுபடி செய்ய வேண்டும்.

தமிழகம் முழுவதும் கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பழைய கடன்கள் திரும்பச் செலுத்தப்பட்டுவிட்டது. எனவே, அவா்களுக்கு உடனடியாக புதிதாக கடன் வழங்க வேண்டும், தமிழகத்தில் விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, விவசாயிகளுக்கு ஆதரவாக செயல்படும் கட்சிக்கு தமிழக விவசாயிகள் ஆதரவு வழங்கப்படும் எனவும் கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.